தியானப் பாடல்கள் | எல்லாம் எனக்கு நீயாய் |
எல்லாம் எனக்கு நீயாய் இருக்க
யாரிடம் செல்வேன் இறைவா நீ சொல்லும் வார்த்தை வாழ்வல்லவா அல்லும் பகலும் உடன் வாழ்பவா சொந்தங்கள் நூறாய் வாழ்வினில் சூழ்ந்தாலும் துன்பங்கள் வந்தால் நிலைப்பதில்லை உறவுகள் ஆயிரம் உலகினில் கொண்டாலும் இறவாது இறுதியில் வருவதில்லை நிரந்தரம் உந்தன் அருள் துணை வலிமை நிகரின்றிப் பொழியும் வரம் மழை மேன்மை உன் பாசம் பிரிந்து நான் யாரிடம் செல்வேன் இறைவா வண்ணங்கள் பலதாய் ஒரு சேரத் தோன்றும் வானவில் என்றும் அழகல்லவா எண்ணங்கள் ஒன்றாக செயல்கள் நன்றாகும் வானமும் பூமியும் புதிதல்லவா அருகினில் வாழ்வதே வாழ்வின் வைகறை அருளினில் மகிழ்வதே புதுவாழ்வின் வளர்பிறை உன் நேசம் மறந்து நான் யாரிடம் செல்வேன் இறைவா |