தியானப் பாடல்கள் | ஆதாரம் நீயே அருட்கடலே |
ஆதாரம் நீயே அருட்கடலே - உந்தன் பாதாரம் தொழுதேன் பரம்பொருளே சிலுவையில் தொங்கும் சிவப்புநிலாவே மறுபடி உதிப்பாயா கழுவினில் தூங்கும் அமைதிப்புறாவே மறுபடி உயிர்ப்பாயா - (2) திரன்ன திரன்ன திரன்ன திரன்ன திரன்னன தரன்ன திரன்னனா பிரபஞ்சத்தின் உறக்கங்கள் கலைக்கும் உன் நடனம் பிரசன்னத்தில் துயில் மீண்டு எடுப்பேன் நான் ஜனனம் பூக்கும் மனமெல்லாம் பொன்காலை வானம் ஸா ஸஸ ரிஸ ரிஸ ரிநி ரிநி மப நீ நிநி ரிஸ நிரி ஸா ஸா பார்க்கும் இடமெல்லாம் என் தேவ கானம் ஆ பனித்துளிக் குடங்கள் பூக்களின் தலையில் துளித்துளி நீர் வருக வந்து ஒளி முத்தம் நீர் தருக விழித்துளி விழுந்து வழித்தடம் வழிந்து மழைத்துளி நீர் விழுக விழுந்து அகத்தினில் கரைந்திடுக கவித்துளி பொழிந்தேன் கன்னித்தமிழ் புனைந்தேன் உயிர்த்துளி நீ எழுக எழுந்து ஜதியினில் உயிர்த்திடுக தத்தத்தரிகிடதோம் தத்தத்தரிகிடதோம் தகதிமிதோம் தனதினனான தீரனா தனனன தீரனா திரனனனா தன திரனா திர னனனா தன திரனா தூங்கும் நீதி இங்கு துயிலெழும் நாள் வேண்டும் தாங்கும் நிலம் மீது அமைதியின் துயில் வேண்டும் மனிதம் தொலைத்த மானுடம் முடிவாகும் ஸா ஸஸ ரிஸ ரிஸ நிஸ நிஸ பநி பநி மப நீ மப நீ மப நீ ரீ ஸா புனிதம் நிலைத்த புதுயுகம் விடிவாகும் கடலின் கால்களில் அலைகள் சலங்கை வானின் கால்களிலே அந்த வானவில் சலங்கைகளோ மலையின் கால்களில் அருவிகள் சலங்கை கிளையின் கால்களிலே அந்த இலைகள் சலங்கைகளோ நிலத்தின் கால்களில் ஓடைகள் சலங்கை கிழக்கின் கால்களிலே அந்த சூரியன் சலங்கைகளோ |