தியானப் பாடல்கள் |
அன்பென்னும் தோட்டத்தில் இறைவா ஒரு அழகான மலராக நான் மாறவேண்டும் - -உம் அன்பென்னும் தோட்டத்தில் இறைவா ஒரு அழகான மலராக நான் மாறவேண்டும் தினம் நீரூற்றுவாய் நல் ஒளி காட்டுவாய்--2 உன் கைவிரலின் தீண்டலில் அகம் மகிழ்வேன் உம் அன்பென்னும் தோட்டத்தில் இறைவா ஒரு அழகான மலராக நான் மாறவேண்டும்--2 அதிகாலை உனக்காய் கண் விழிப்பேன் - நீ அருகினில் வரும் வரைக் காத்திருப்பேன் அன்பரே மகிழ்ந்திட மனம் கொடுப்பேன் - உம் அருட்பதம் அதில் எந்தன் இதழ் உதிர்ப்பேன் அனுதினமும் மலர்ந்திடுவேன் உனதருளால் மகிழ்ந்திடுவேன் என் இதயம் கவர்ந்த இனிய தேவனே இதழ்களை உனக்காய் விரித்து வைப்பேன் - உன் இன்முகம் கண்டதும் சிரித்திருப்பேன் காலடி ஓசையைக் கேட்டதுமே - என் கர்த்தா நான் கனவினில் மிதந்திடுவேன் கனி தரும் நல் மரம் அதைப் போல் கருணையின் மறு உருவாக எனை அணைத்துக் காக்கும் அன்பு தெய்வமே |