Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்   அன்பு செய் தந்தாய்  

அன்பு செய் தந்தாய்
அருள் நிறை இறைவா
அடியவர் நாங்கள் உன் அன்பு மக்கள்
மேயும் உன் மந்தையின் ஆடுகளே யாம்
ஆயன் நீர் எம்மை வழிநடத்தும்

புண்பட்ட நெஞ்சம் குணம் பெறவேண்டும்
புனிதமில்லான்மா பொலிவுறவேண்டும்
கண்ணீர் வடிப்போர் களித்திடவேண்டும்
கருணைக் கடலே வழிநடத்தும்

நலிவுற்ற மக்கள் வலுப்பெறவேண்டும்
களைப்புற்ற பிள்ளைகள் இளைப்பாறவேண்டும்
நாற்திசை சிதறிய ஆடுகள் யாவும்
நாதனே சேர்ந்திட வழிநடத்தும்
பொங்கருள் தந்தாய் உன்பேரன்பினை
புகழ்சேர் மனுமகன் இயேசுவினிடத்தும்
புத்துயிர் அளிக்கும் ஆவியினிடத்தும்
பூரணனே காண வழிநடத்தும்

பன்னரும் உமது அன்பினைப் பிறருடன்
பகிர்ந்து மகிழ்ந்திடத் திருவருள் தாரும்
அன்பும் நீதியும் நிறைந்த சமூகம்
ஆக்கிடவே எம்மை வழிநடத்தும்
இறைவிசுவாசத்தில் உறுதியாய் நின்று
எங்கள் நம்பிக்கையில் மகிழ்ச்சியும் கொண்டு
இறையன்பில் தெய்வ மணத்தினை நுகர்ந்து
நேயம் பெருகிட வழிநடத்தும்

புதுவாழ்வென்னும் தொடர் பயணத்தில்
புதுப்பிக்கும் அனைத்தின் படைப்பனைத்தும்
புதுப்பிக்கும் கருவியாய் யாம் பணி புரிந்திட
புகழ் நிறை தந்தையே வழிநடத்தும்
திருவனைத்தையும் எம் ஆண்டவராகிய
இயேசுக்கிறீஸ்துவின் வழியாய் உம்மை
ஜெபவழி வேண்டி மன்றாடுகின்றோம்
நல்வன்பிறையே அருள் புரியும். ஆ...ஆ....ஆ...ஆ.....

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்