Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள் ஆண்டவரே நீரே என் ஆதரவு  
தொகையறா - ஆண்டவரே நீரே என் ஆதரவு (2)
 நிரிகரிநிச நித நிரிபகரிநிச

 ஆண்டவரே நீரே என் ஆதரவு (2)
எனை கை நிகழா உறவு  (அ அ ஆ...)
உன் அருள் ஒன்றே வாழ்வின் வரவு
உன் வரம் ஒன்றே நெஞ்சின் நிறைவு
ஆண்டவரே நீரே என் ஆதரவு நீரே என் ஆதரவு

பெண்கள் : அஅஆஅ...

தீமையும் பகைனையும் எனை வீழ்த்தும் வேளையில்
நீரே என் ஆதரவு
தீயன துன்பம் எனை ஆழ்த்தும் போதும்
நீரே என் ஆதரவு
ஓயாத அலையென தொடரும் கவலையில்
நீரே என் ஆதரவு
தேயாத நிலவென படரும் பயத்தில்
நீரே என் ஆதரவு
எனைக் காக்கும் கேடயமே என் இறைவா
தலைநிமிரச் செய்கின்ற என் தலைவா (2)
மன்றாடும் நாளில் என் குரல் கேட்டு
திருமலை வீற்று பதிலளிப்பார் (2)

ஆண்டவரே நீரே என் ஆதரவு நீரே என் ஆதரவு 

ஏளனம் நகைப்பும் எனை நோக்கி வந்தாலும்
நீரே என் ஆதரவு
ஏன் இந்த வாழ்வென மனம் நோகும் நேரத்தில்
நீரே என் ஆதரவு
பேரும் புகழும் இழந்து தவித்தாலும்
நீரே என் ஆதரவு
உயிரான உறவுகள் இகழ்ந்து வெறுத்தாலும்
நீரே என் ஆதரவு
என் வாழ்வின் மாட்சியே என் இறைவா
தலைநிமிரச் செய்கின்ற என் தலைவா
மன்றாடும் நாளில் என் குரல் கேட்டு
திருமலை வீற்று பதிலளிப்பார் (2)











 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்