தியானப் பாடல்கள் | ஆண்டவரே உம் பாதையிலே |
ஆண்டவரே உம் பாதையிலே நான் நடக்கச் செய்தருளும் வல்லவரே நல்லவரே என் மீது இரங்கும் தூயவரே பேரன்பும் இரக்கமும் கொண்டவரே உடன்படிக்கை தந்தவரே உமது வழியில் நான் நடக்க உமது நெறிகளைக் கற்றுத்தாரும் பாவி என்மீது மனமிரங்கி பரிவுடன் என்னைக் காத்தருளும் என் பாவதின் எண்ணாமல் உன் பேரன்பில் என்னை வாழச் செய்யும் உம்மையே நான் என்றும் நம்பி வாழ எனக்கு உன் துணை தந்தருளும் வாக்குறுதி தந்த ஆண்டவரே - உம் நேர்மையில் நான் வாழ்ந்திடுவேன் |