தியானப் பாடல்கள் | ஆண்டவரே உம்மை நோக்கி |
ஆண்டவரே உம்மை நோக்கி அழைக்கின்றேன் என் உள்ளம் உமக்காய் ஏங்கிறதே தீமைகள் தீண்டும்போது எனை நீர் திடப்படுத்தும் தீயோர் சூழும்போது எனை நீர் காத்துக் கொள்ளும் குற்றங்கள் களைய குறைகள் நீக்க துணை செய்வாய் உம்மோடு உறவாக வரம் தாரும் - நிதம் உம்மோடு உறவாட வரம் தாரும் சோகங்கள் வாட்டும்போது எனை நீர் பெலப்படுத்தும் பாவத்தில் வீழும்போது எனை நீர் தாங்கிக் கொள்ளும் நன்மைகள் ஏற்க தீமைகள் களைய இடம் தாருமே நீதியில் வாழ்ந்திட வரம் தாரும் - உம் நீதியில் வாழ்ந்திட வரம் தாரும் தூபம் போல் என் செபமும் விண்ணகம் எழுந்திடட்டும் உம் கரம் மடித்து எனை உன் வழி நடத்திடட்டும் ஒளிகொண்டு வாழ இருள் எல்லாம் நீங்க வரம் தாருமே சந்நிதி வாழ்ந்திட வரமருள்வாய் - உன் சந்நிதி வாழ்ந்திட வரமருள்வாய் |