தியானப் பாடல்கள் | அளவில்லா அன்பும் |
அளவில்லா அன்பும் நலம் செய்யும் பண்பும் உடையவர் ஆண்டவரே அகமகிழ்வுடனே அவரின் அழைப்பை அனைவரும் ஏற்போமே மறைவாய் உனக்கு எதிராக எத்தனை குற்றம் நான் செய்தேன் முன்னால் எல்லாம் பாவங்கள் எண்ணில்லாமல் நான் செய்தேன் பாவ உணர்வு எனை வாட்ட எங்கும் இருளே காண்கின்றேன் எனினும் உனது பேரிரக்கம் என்னை மீட்பதை உணர்கின்றேன் அன்பைக் காட்டிய பேரன்பு மகனை உலகிற்கு அனுப்பியது தனயன் காட்டிய பேரன்பு சிலுவை மரணம் தாங்கியது மரணநேரமும் பாவியதை மன்னித்து அருள வேண்டியது இறைமகன் அன்பை உலகினிற்கே என்றும் எடுத்து காட்டியது |