தியானப் பாடல்கள் | அழகான உலகம் |
அழகான உலகம் அசைந்தாடும் உயிர்கள் அன்பில் விளைந்த கனிகள் அகலான இதயம் சுடரான வாழ்வு தெய்வம் உந்தன் இல்லம் எல்லாமே எல்லாமே நீயல்லவா இருத்தலும் இயக்கமும் உன் அருளல்லவா அன்பாகி அருளாகி உருவாக்கும் அறிவாகி உண்மைக்கு உருவாகி உடன் வாழும் இறைவா என் வாழ்வை பரிசளித்து வாழ்த்துச் சொன்னாய் வாழும் தெய்வம் நீயே செயற்கரிய செயல் புரியும் ஊக்கம் தந்தாய் தொடரும் இந்த பயணம் என் தாயாக நீ இருந்தாய் தந்தை அன்பாலே அரவணைத்தாய் நல் நண்பனாக வந்து உறவு தோள் கொடுத்து இன்பப் பாடல் இசைத்தாய் பாதைக்கு விளக்கானாய் இந்தப் புவி வாழ சிந்தும் மழையாக வந்து வளமை ஊட்டுகிறாய் மண்ணில் உயிர் வாழ நல்ல பயிராக நின்று நிறைவை என்னில் தந்தாய் உயிர் நோக்காக உளம் நுழைந்தாய் உயிர் மூச்சாக எனில் கலந்தாய் முழு மனிதனாக வந்து உறவு பாடல் தந்த உனது ஆட்சி அமைப்பேன் சமநீதி மலரச் செய்வேன் |