தியானப் பாடல்கள் | அழகான கீதம் எந்தன் |
அழகான கீதம் எந்தன் வாழ்வின் சங்கீதம் என் ஆன்மா சுரங்கள் மீட்கும் இன்னிசை பூபாளம் நான் பாடும் கானம் இன்ப தேன் சிந்தும் ராகம் என் பாட்டு காற்றில் வந்த சுகமான ராகம் இறைவனைத் தேடித் தேடி இதயத்தின் தாகம் இதய ஏக்கத்தில் என் ஆன்மா பாடும் என் விழியினில் கலந்த உறவு உன்னையே நாடுதே என் விழியினில் விழுந்த நினைவு உன்னையே தேடுதே உன் நினைவாக உன்னோடு வாழ என் மனம் நாட என் வாழ்வு மாற நீ வந்து என்னில் தங்கிட வேண்டும் -(2) வானிலே உலாவும் நிலவு உன் புகழ் பாடுமே தேனிலே கலந்த மலரும் தேனிசை பாடுமே மலரோடு சேரும் மணம் போல நானும் உன்னோடு சேர்ந்து மணம் வீசச் செய்து என்னையே என்றும் உனதாக மாற்றும் -(2) |