தியானப் பாடல்கள் | ஆபத்து காலத்தில் என்னை |
ஆபத்து காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு என்று உரைத்தவரே எந்தன் இறையரசே என்றும் வாழ்பவரே என்னை ஆழ்பவரே கூப்பிடும் குரலுக்கு செவி கொடுப்பார் புறம்பே விடமாட்டார் நம்பிடும் அனைவர்க்கும் நலம் தருவார் புதுமைகள் புரிந்திடுவார் தீமைகள் உன்னை அணுகாது வாதை கூடாரம் நெருங்காது தூதரின் படையுடன் துணைவருவார் தனியே தள்னி விடமாட்டார் வல்லமை மிகுந்தவர் வலுதருவார் வலிகள் பலவும் அகற்றிடுவார் தேர்ந்தது நம்மை அவர்தானே தேவன் தம் பேரன்பில் குறையேது |