தியானப் பாடல்கள் | 466-விலையேறப் பெற்றவன் |
விலையேறப் பெற்றவன் நீமகனே விலையேறப் பெற்றவன் நீ விலையேறப் பெற்றவள் நீமகளே விலையேறப் பெற்றவள் நீ இரத்தம் சிந்தி என்னை நான் சொந்தமாக்கினேன் யார் உன்னைக் கைவிட்டாலும் - நான் உன்னோடு இருக்கின்றேன் தேயாத நிலவாக உயர்ந்தோங்கி வாழ்ந்தாலும் விலையேறப் பெற்றவன் நீ நோயாளி என்றாகி நலமெல்லாம் இழந்தாலும் வைரமணி நீ எனக்கு - என் இதயம் துடிப்பது உனை நினைத்து கடன்பட்டு நொந்தாலும் காசில்லை என்றாலும் விலையேறப் பெற்றவன் நீ உலகத்தில் எல்லோரும் உனைவிட்டுப் பிரிந்தாலும் வைரமணி நீ எனக்கு - என் இதயம் துடிப்பது உனை நினைத்து விலையேறப் பெற்றவள் நீமகளே விலையேறப் பெற்றவள் நீ இரத்தம் சிந்தி உன்னை நான் சொந்தமாக்கினேன் யார் உன்னைக் கைவிட்டாலும் உன்னோடு இருக்கின்றேன் |