தியானப் பாடல்கள் | 465-வசந்த காலத்தில் |
வசந்த காலத்தில் வாழத் துடிக்கின்றேன் வறண்ட காலத்தில் வாழ மறுக்கிறேன் - 2 வாழ்வில் சுகங்கள் வந்திடினும் - பல வருத்தங்கள் எனையே சூழ்ந்திடினும் - 2 எதையும் தாங்கும் இதயம் எனக்கு தந்திட உம்மை வேண்டுகிறேன் - 3 வசந்த அனுதின சிலுவைகள் வந்திடினும் - நான் அண்டினோர் வெறுத்து ஒதுக்கிடினும் - 2 நீ என் உயர்ந்த நண்பன் என்று உணர்ந்து உம்மை (நாடி வந்தேன்) 3 வசந்த உலக சுகத்திற்கோர் எல்லையுண்டு அதன் விளைவையும் உணர்ந்து விட்டுவிட்டேன் என்னை உம்மில் இணைக்கவந்தேன் ஆட்கொண்டென்னை மாற்றிடுவாய் காத்திடுவாய் மாற்றிடுவாய் |