தியானப் பாடல்கள் | 464-யாரிடம் செல்வோம் |
யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வுதரும் வார்த்தையெல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன யாரிடம் செல்வோம் இறைவா? அலைமோதும் உலகினிலே ஆறுதல் நீ தர வேண்டும் அண்டி வந்தோம் அடைக்கலம் நீ ஆதரித்தே அரவணைப்பாய் - 2 மனதினிலே போராட்டம் மனிதனையே வாட்டுதையா குணமதிலே மாறாட்டம் குவலயம்தான் இணைவதெப்போ 2 வேரறுந்த மரங்களிலே விளைந்திருக்கும் மலர்களைப்போல் உலகிருக்கும் நிலை கண்டும் உனது மனம் இரங்காதோ |