Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  463-யார் உன்னைக்  


யார் உன்னைக் கைவிட்ட போதும்
நான் உன்னைக் கைவிடமாட்டேன்
அஞ்சாதே - 8 (2)

நோயினால் உள்ளம் சோர்ந்திடும் போது
மகனே பதறாதே - (மகனே பதறாதே - 2)
கடன் தொல்லை உன்னைச் சூழ்ந்திடும் போது
மகனே கலங்காதே - (மகனே கலங்காதே - 2)
காக்கும் தெய்வம் இயேசு உன்னைக்
காலமும் காத்திடுவார் (2)

உழைத்தும் உயர்வு இல்லாதிருந்தால்
மகனே பதறாதே - (மகனே பதறாதே - 2)
உலகமே உன்னை ஒதுக்கிடும் போது
மகனே கலங்காதே - (மகனே கலங்காதே - 2)
காக்கும் தெய்வம் இயேசு உன்னைக்
காலமும் காத்திடுவார் (2)


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்