தியானப் பாடல்கள் | 462-வார்த்தையிது |
வார்த்தையிது - இறை வார்த்தையிது மாறாதது என்றும் மறையாதது ஒளி தரும் வார்த்தையிது அருள் பொழிந்திடும் வார்த்தையிது அமைதியின் வார்த்தை ஆக்கத்தின் வார்த்தை இரக்கத்தின் வார்த்தை ஈகையின் வார்த்தை உண்மையின் வார்த்தை ஊக்கத்தின் வார்த்தை (2) எங்கும் எதிலும் நிறைந்த நல் வார்த்தை என்றும் நம்மைக் காத்திடும் வார்த்தை மகிழ்ச்சியின் வார்த்தை வெற்றியின் வார்த்தை உயிருள்ள வார்த்தை உதவிடும் வார்த்தை ஆவியின் வார்த்தை ஆற்றிடும் வார்த்தை (2) ஆற்றல் மிகுந்த ஆண்டவர் வார்த்தை உயிர்கள் எல்லாம் தொழுதிடும் வார்த்தை |