Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  461-வாழ்வு தரும் ஒளியும்  


வாழ்வு தரும் ஒளியும் நீயே - இயேசுவே
வாழ்வு தரும் வழியும் நீயே 2
உம்மிடம் வருபவர்கள் பசியடையார்
நம்பிக்கை வைப்பவர்கள் தாகமடையார்

உம் வார்த்தை கேட்போரெல்லாம்..
எந்நாளும் நிலைத்திருப்பர்
எப்பொழுதும் கனி தருவர்
உன்நாமம் புகழ்ந்திடுவர்
உம் அன்பில் நிலைப்போரெல்லாம்.
உம் நினைவாய் வாழ்ந்திடுவர்
உம்வழியில் நடந்திடுவர்
உம் பணியைத் தொடர்ந்திடுவர்
வார்த்தையான இயேசுவே ஆசீர் தாருமே 2
உம் படைப்பாய் வாழவே எம்மை மாற்றுமே 2

உம்மை நம்பி வருவோரெல்லாம்
வெறுமையாய் சென்றதில்லை
வழி தவறி நடந்ததில்லை
வான்வெளியைக் கண்டிடுவர்
உம் விருப்பம் செய்வோரெல்லாம்
உமக்காக வாழ்ந்திடுவர்
உம்மருளைத் தந்திடுவர்
நிறைவாழ்வைப் பெற்றிடுவர்
வார்த்தையான இயேசுவே ஆசீர் தாருமே 2
உம் படைப்பாய் வாழவே எம்மை மாற்றுமே 2



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்