Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ;இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  460-வாழ்வு தந்த இயேசுவே  


வாழ்வு தந்த இயேசுவே வருக
வார்த்தையான இயேசுவே வருக
இந்த புவியை ஆளும் தேவா இந்த பூமி செழிக்க வா வா
முழுமுதலே முதற்பொருளே வருக வருக
நிறைவாழ்வை நிலையாக தருக தருக
உண்மையின் தேவா உயிருள்ள தேவா உன்னத தேவா

ஆண்டவரே என்று உம்மை அழைக்கிறேன்
என் ஆதங்கத்தை உன்னிடத்தில் சொல்கிறேன் (2)
தீண்டாமை என்னும் நோயை ஒழிக்கணும் - 2 இந்த
தேசம் எங்கும் சமத்துவமே மலரணும் - 2

மனிதம் மக்கள் மனதில் பதியணும் - அவர்
மாண்புடனே வாழ வழி வகுக்கணும் (2)
இனியும் மத வேறுபாடு நீக்கணும் - ஐயா
இந்தச் சமுதாயம் உன்னால் வளரணும் - 2

உண்மை வாழ்வை உறுதியாக நம்புவோம் - இன்று
உரிமை அறிந்து உன்னதராய் வாழுவோம் (2)
கண்ணிமைபோல் காப்பதுவே இயேசுதான் - அவர்
கருத்தை உணர்ந்து நடப்பதுவே நலமாகும் - 2


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்