Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  456-மனிதன் மிருகமாகலாம்  



மனிதன் மிருகமாகலாம்
அவன் மனிதனாகலாம் - அந்த
மனிதன் இறைவனாகலாம் - 2

பொருளுக்கடிமையாகும்போது மிருகமாகிறான்
பொருளை பகிர்ந்துகொள்ளும்போது மனிதனாகிறான்
பொருளில் பற்று துறக்கும்போது இறைவனாகிறான் -2
அவன் இறைவனாகிறான் - 2

செருக்கு சிந்தை ஏறும்போது மிருகமாகிறான்
செருக்கை வென்று வாழும் போது மனிதனாகிறான்
சேவை செய்து உயரும்போது இறைவனாகின்றான் -2
அவன் இறைவனாகின்றான் - 2

உடலின் இச்சை நோக்கம் என்றால் மிருகமாகின்றான்
உடலின் நோக்கம் உணர்ந்து விட்டால் மனிதனாகின்றான்
உடலை அருளால் வென்று விட்டால் இறைவனாகிறான் -2
அவன் இறைவனாகிறான் - 2



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்