Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  455-மன்னவா உன் வாசல்  



மன்னவா உன் வாசல் தேடி
ஓடி நான் வந்தேன்
உன் முகத் தரிசனம் கேட்டேன் (2)
உன் பதம் அமர்ந்து உன் முகம் பார்த்து
உன் மொழி கேட்டால் போதுமே (2)

அன்பு கமழும் மென்மையான
அனுபவம் எல்லாம்
அழகு வாய்ந்த இனிமையான
நினைவுகள் எல்லாம் (2)
உன்னிடம் தானே பேச இயலும் - 2
உவந்து எல்லாம் கூறமுடியும் கூறமுடியும்

துன்பம் நெஞ்சில் இறக்கி வைத்த
சோகச் சுமையெல்லாம்
நடந்தவைகள் அழித்துத் தகர்த்த
நம்பிக்கை எல்லாம் (2)
புரிந்து கொள்வார் எவரும் இல்லை - 2
உன்னைத் தவிர யாரும் இல்லை யாரும் இல்லை




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்