Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  453-போற்றுங்கள்  



போற்றுங்கள் போற்றுங்கள்
ஆண்டவரைப் போற்றுங்கள்
வாழ்த்துங்கள் வாழ்த்துங்கள் - அவர்
திருப்பெயரை வா..ழ்த்துங்கள்
நல்லவர் நம்பத் தகுந்தவர் - அவர்
வல்லவர் நம்மை வாழ்விப்பவர்

பாவங்கள் மன்னித்து பழிதனை விலக்கினார்
போற்றுங்கள் போற்றுங்கள்
பாசம் பொங்க வாரி அணைத்து
பரிவுடன் நம்மைத்தாங்கினார்
போற்றுங்கள் போற்றுங்கள்
அவர் தரும் மீட்பினையே
நாள்தோறும் அறிவியுங்கள்
மக்களினம் அனைவருக்கும்;
அவர் மாண்பினைச் சொல்லிடுங்கள்

சாவின் பிடிதனை விடுவித்துக் காத்திட்டார்
போற்றுங்கள் போற்றுங்கள்
நேசம் நிறைந்த வார்த்தைகளாலே
நெருக்கடியில் தேற்றினார்
போற்றுங்கள் போற்றுங்கள்
வியத்தகு செயல்களையே
செய்த விதம் சொல்லிடுங்கள் - (2)
தெய்வங்கள் அனைத்திலுமே
இவர் சிறந்தவர் என்றிடுங்கள்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்