தியானப் பாடல்கள் | 458-பிரிக்க முடியாது |
பிரிக்க முடியாது என்னைப் பிரிக்க முடியாது கிறீஸ்துவின் அன்பிலிருந்து பிரிக்க முடியாது எதுவும் - (எவரும்) பிரிக்க முடியாது வேதனை துன்பம் இன்னலோ இடரோ பிரிக்க முடியாது (2) சோதனை துயரம் பட்டினி நெருக்கடி பிரிக்க முடியாது (2) வாழ்வோ சாவோ வானதூதரோ பிரிக்க முடியாது (2) ஆட்சியாளரோ அற்ப மனிதரோ பிரிக்க முடியாது (2) நிகழ்வன வருவன வலிமை மிக்கன பிரிக்க முடியாது (2) உள்ளத்தில் உள்ளவை ஆழத்தில்; உள்ளவை பிரிக்க முடியாது (2) |