Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  447-பாலைவனம் சோலையாகும்  
பாலைவனம் சோலையாகும்
பஞ்சமெல்லாம் நீங்கிப் போகும்
பரமன் இயேசு பார்வையினாலே
நெஞ்சமெல்லாம் இனிமையாகும்
நினைத்ததெல்லாம் நிறைவேறும்
நம் இயேசு வார்த்தையினாலே
நம் தேவன் நல்லவரே
நம் தேவன் வல்லவரே

ஆண்டவரை மனதில் வைத்து
அனைத்தையும் நாம் செய்யும் போது
பாதைகளை அவர் செம்மையாக்குவார் (2)
அவரை நோக்கி பார்த்தவர்கள் அவமானம் அடைவதில்லை (2)
ஆயிரமாய் ஆசி பெறுவார் ஆனந்தம் அடைந்திடுவார்

திராட்சை செடியின் கிளைப் போல
இயேசுவோடு இணைந்திருப்போம்
பலன் தருவோம் நலன்கள் பெறுவோம் (2)
என்ன குறை இருந்தாலும் அவரோடு நாமிருந்தால் - 2
எல்லாமே நிறைவாகுமே நம் வாழ்வெல்லாம் மகிழ்வாகுமே



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்