Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  442-பலன் கொடுப்பீர்  


பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர்
பண்பட்ட நிலம்போல் பலன் கொடுப்பீர்
வழியோhரமா? நான் கற்பாறையா? 2
முட்புதரா? நான் நல்ல நிலமா?

இறைவனின் வார்த்தை விதையாகும்
அறியா உள்ளம் வழியோரம்
பறவைகள் விரைந்தே தின்பதுபோல்
பகைவனாம் தீயோன் பறித்திடுவான்

மண்ணில்லா பாறை நிலமாகும்
மனதில் நிலையற்ற மனிதர்களே
வேரற்ற வாழ்க்கை வாழ்வதனால்
வெயிலில் வார்த்தை கருகிவிடும்

முட்செடி புதராம் மனுவுள்ளம்
முளைத்திடும் ஆசைகள் நெரித்திடவே
இறைவனின் வார்த்தை வளரவில்லை
இறுக்கியே ஆசைகள் கொன்றதனால்

இறைவனின் வார்த்தையை உணர்ந்திடுவோர்
குறையில்லாப் பண்பட்ட நிலமாகும்
அறுபது முப்பது நூறு என்றே
அறுவடை எடுப்பார் தம் வாழ்வில்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்