தியானப் பாடல்கள் | 441-பார்வை பெற வேண்டும் |
பார்வை பெற வேண்டும்
- நான் பார்வை பெற வேண்டும் என் உள்ளம் உள்ளொளி பெற வேண்டும் - புது வாழ்வின் தடைகளை தாண்டி எழும் - புதுப் பார்வை பெற வேண்டும் நாளும் பிறக்கும் உன் வழியைக் காணும் பார்வை தர வேண்டும் உன்னாலே எல்லாமே ஆகும் நிலை வேண்டும் நான் பார்வை பெற வேண்டும் நீதி நேர்மை உணர்வுகளை - நான் பார்க்கும் வரம் வேண்டும் உண்மை அன்பு உயர்ந்திடவே உழைக்கும் உறுதி தர வேண்டும் எல்லோரும் ஒன்றாகவே வாழும் வழி வேண்டும் நான் பார்வை பெற வேண்டும் |