தியானப் பாடல்கள் | 440-பார்க்கும் முகமெல்லாம் |
பார்க்கும் முகமெல்லாம் - இறைச் சாயல் தெரிகிறதே கேட்கும் மொழியெல்லாம் - இறை வார்த்தை ஒலிக்கிறதே ஆ... (2) திரும்பிடும் திசையெல்லாம் - எழில் கொஞ்சும் இறை அழகே அசைகின்ற அணுவெல்லாம் மகத்தான இறை செயலே பனியின் துளியில் - இறை முகம் பார்க்கின்றேன் இலையின் அசைவில் - இறை இசை கேட்கின்றேன் - (இறைவா - 2) (2) வீசிடும் காற்றெல்லாம் இறை சுவாசமே மலர்களின் மணமெல்லாம் இறை வாசமே (2) உயிரே உணர்வே உம் புகழ்பாடி மகிழ்வேனே நிலத்தின் விளைவெல்லாம் இறைப் புன்னகை கனியின் சுவையெல்லாம் இறை இன்பமே - (இறைவா - 2) (2) கடலின் அலையெல்லாம் இறை இராகமே பொழிந்திடும் மழையெல்லாம் இறைத் தாளமே (2) வியப்பே விந்தையே உம் புகழ்பாடிப் புகழ்வேனே |