தியானப் பாடல்கள் | 438-படைப்புக்களே நம் |
படைப்புக்களே நம் ஆண்டவரை பாடுங்களே நீங்கள் பாடுங்களே - 2 அருஞ்செயல் எனக்கு அவர் செய்தார் ஆனந்தமே என்னில் ஆனந்தமே அன்பீந்தார் அருள் தந்தார் - பண்பும் பணிவும் அவர் அளித்தார் யார் என்னைக் கைவிடினும் - ஆண்டவர் என்னை அழைக்கின்றார் இறைவனின் அன்பினுக்கு - இந்த உலகினில் உவமையுண்டோ - 2 மனம் கலங்கி பரிதவித்தேன் - நிம்மதி மனதில் எனக்களித்தார் மாசுடன் நான் நிற்கையிலே - மன்னிப்பு அவர் எனக்களித்தார் இறைவனின் அன்பினுக்கு - இந்த உலகினில் உவமையுண்டோ - 2 நான் அவரை மறந்தாலும் - அவரே என்னைக் காக்கின்றார் விசுவாசம் தளர்ந்தாலும் - வேதனை நெஞ்சில் நீக்குகின்றார் இறைவனின் அன்பினுக்கு - இந்த உலகினில் உவமையுண்டோ - 2 அவர் படைப்பின் மேன்மையை நினைத்து ஆனந்த மகிழ்வு அடைகின்றேன் அவைகளுடன் வாழ்வதிலே ஆண்டவர் அருளை காண்கின்றேன் இறைவனின் அன்பினுக்கு - இந்த உலகினில் உவமையுண்டோ - 2 |