Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

  தியானப் பாடல்கள்  435-நீயே எமது வழி  


நீயே எமது வழி நீயே எமது ஒளி
நீயே எமது வாழ்வு இயேசையா - 2

நான்கு திசையும் பாதைகள் சந்திக்கின்ற வேளைகள்
நன்மையென்ன தீமையென்ன அறியாத கோலங்கள் - (2)
நீயே எங்கள் வழியாவாய் நீதியி;ன் பாதையின் பொருளாவாய் - (2)
உமது பாத பதிவுகள் எமது வாழ்வின் தெரிவுகள்
அவற்றில் நாம் நடந்தால் வெற்றியின் கனிகள்

துன்ப துயர நிகழ்வுகள் இருளின் ஆட்சிக்காலங்கள்
தட்டுத்தடுமாறி விழ தகுமான சூழல்கள் - (2)
நீயே எங்கள் ஒளியாவாய் நீதியின் பாதையின் சுடராவாய் - (2)
உம்மை நாங்கள் போற்றிட பொய்மை எங்கும் போக்கிட
உண்மையின் இறைவா உமதருள் தாராய்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்