Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

  தியானப் பாடல்கள்  386-நீயே என் கோயில் ஆண்டவனே  

நீயே என் கோயில் ஆண்டவனே - உன்னில்
நிலையாக வாழ்வேன் ஆசையிலே
நீயே என் கோயில் நானோ உன் சாயல்
உனைப் போல வாழ்வேன் ஆசையிலே
நீயே என் கோயில் நீயே என் தெய்வம்
நீயே என் கோயில் ஆண்டவனே (2)

வார்த்தையின் வடிவில் உனைப் பார்க்கிறேன்
வாழ்க்கையின் வழியெங்கும் உனைப் பார்க்கிறேன்
செயலுள்ள நம்பிக்கையில் உனைப் பார்க்கிறேன்
வாழ்க்கையே வழிபாடாய் உனைப் பார்க்கிறேன்
புதுமையின் பொலிவினிலே உனைப் பார்க்கிறேன் - 2
உருவ அருவங்களில் உனைப் பார்க்கிறேன்
நீயே என் கோயில் நீயே என் தெய்வம்...

பேழையின் பிரசன்னத்தில் உனைப் பார்க்கிறேன்
உயிருள்ள வசனத்தில் உனைப் பார்க்கிறேன்
மண்ணில் மனிதரிலே உனைப் பார்க்கிறேன்
தாய்மையின் நேசத்திலே உனைப் பார்க்கிறேன்
நண்பரின் தியாகத்திலே உனைப் பார்க்கிறேன் - 2
இயற்கையின் இயல்பினிலே உனைப் பார்க்கிறேன்
நீயே என் கோயில் நீயே என் தெய்வம்...




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்