தியானப் பாடல்கள் | 432-நீயின்றி வேறேது |
நீயின்றி வேறேது சொந்தம் - உன் நினைவின்றி எனிலேது இன்பம் நிலையான நீயே பந்தம் - 2 - உன் நிறைவாழ்வு ஒன்றே செல்வம் செல்வம் விளக்கின் கீழ் இருளுண்டு நிலவின் உள் கறையுண்டு குறையுண்டு என் வாழ்விலே - ஓ நிறையுண்டு என் வாழ்விலே நிறம் மாறும் பூவுண்டு நிலை மாறும் உறவுண்டு அகழ்வோரை நிலம் தாங்குமே - ஓ ஆகாயம் மழை தூவுமே கரைசேரா அலையுண்டு - கரை சேரா படகுண்டு கடல் மீது நீர் வாருமே - ஓ உடன் யாவும் நீர் மேவுமே அலைபாயும் ஆன்மாவின் நிலைமாறும் நிலைகண்டு எனையாளும் என் தெய்வமே - ஓ அருள் வீசும் ஓர் தென்றலே சந்தங்கள் ஏழும் என் சொந்தங்கள் ஆனாலும் சங்கீதம் நீயல்லவா - ஓ சந்தோசம் நீயல்லவா சோகங்கள் சூழும் - என் பாதங்கள் மீளும் - என் பயணங்கள் நீயல்லவா - ஓ பாதைகள் நீயல்லவா அழுகின்ற நல்லார்க்கும் தொழுகின்ற தீயோர்க்கும் ஆகாரம் நீயல்லவா - ஓ ஆதாரம் நீயல்லவா பாரங்கள் சுமப்போர்க்கும் பாவங்கள் சுமப்போர்க்கும் சுமைதாங்கி நீயல்லவா - நீ தோள் தாங்கும் தாயல்லவா |