தியானப் பாடல்கள் | 431-நீயாக நான் மாற |
நீயாக நான் மாற வேண்டும் உனைப் போல உறவாட வேண்டும் என் இயேசுவே உன் அன்பிலே எந்நாளுமே நான் வாழணும் உனில் நானும் உயிர் வாழ வேண்டும் - 2 ஏழை நானும் நீயின்றி வாழ்ந்தால் வாழ்வின் பொருளேது (2) கண நேரம் உனை நானும் மறந்திடும் போது கவலைகள் சூழ்கின்றது ஏங்கும் என் இதயம் எழுந்தே நீ வாராய் உயிரோடு கலந்திடுவாய் (2) - 2 என்றும் உந்தன் அன்பொன்று போதும் எனக்கினி வாழ்வினிலே (2) ஏழை என் நினைவினில் எழுந்திடும் எண்ணம் எல்லாமும் நீயாகவே சொல்லொன்று போதும் உன் சொல்லொன்று போதும் என் ஆன்மா குணமடையும் (2) - 2 |