தியானப் பாடல்கள் | 429-நீதி தேவா |
நீதி தேவா நேர்மை நாதா நீயே எந்தன் ஆதி அந்தம் நீதி முறை முழங்க வருவாய் நேர்மை நெறி நிலைக்க அருள்வாய் 2 மனித மாண்பை மறுத்த செயலால் மடிந்து வாழ்வோர் எழுந்து வாழ நீதி முறை முழங்க வருவாய் நேர்மை நெறி நிலைக்க அருள்வாய் - 2 அடக்குவோரின் அடிமை முறையால் அடங்கி வாழ்வோர் நிமிர்ந்து வாழ நீதி முறை முழங்க வருவாய் நேர்மை நெறி நிலைக்க அருள்வாய் - 2 |