தியானப் பாடல்கள் | 428-நீதானே இறைவா |
இயேசுவே நீயே சொந்தம் நீயே தஞ்சம் நீயே செல்வம் என் வாழ்வின் மையம் ஆ ஆ நீதானே இறைவா நிலையான சொந்தம் உனையன்றி உலகில் உனக்கேது பந்தம் உன்னருள் ஒன்றே எனக்குத் தஞ்சம் உனையென்றும் பிரியாது ஏழை என் நெஞ்சம் நீயே சொந்தம் நீயே தஞ்சம் நீயே செல்வம் வாழ்வின் மையம் கொடியோடு இணைந்துள்ள கிளைபோலவே உன்னோடு ஒன்றாகும் அருள் வேண்டுமே கனி தந்து என் வாழ்வு செழிப்பாகவே வருவாயே தலைவா என் மூச்சிலே நிலை வாழ்வு தருகின்ற வார்த்தைகளோ இறை மைந்தன் உன்னிடமே இருக்கின்றன நானெங்கு போவது உனைப் பிரிந்து வாழ்வெல்லாம் வருவேன் உனைத் தொடர்ந்து |