Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

  தியானப் பாடல்கள்  427-நீர் ஒருவர் மட்டும்  


நீர் ஒருவர் மட்டும் - இயேசுவே
என்னை விட்டு நீங்காதிருப்பதும் ஏனோ
தெய்வீக அன்பால் தானோ - 2 (2)

என்னைப் பாடி மகிழ்வித்த புள்ளினங்கள் - தங்கள்
கூடுகள் தேடிப் பறந்த பின்னும் (2) - நான்
வாழ்ந்த காலத்து நண்பரெல்லாம் - நான்
தாழ்ந்த காலத்தில் பிரிந்த பின்னும்

எந்தன் மேனி தழுவிய இளந்தென்றல் - சொந்த
தாய் கடலோடு கலந்த பின்னும் (2) - எந்தன்
பாதையின் விளக்காம் பகலவனும் - வந்த
காரிருள் மாயையால் பிரிந்த பின்னும்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்