Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

  தியானப் பாடல்கள்  426-நீ என் மகனல்லவா  

நீ என் மகனல்லவா - உன்னை
அழைத்ததும் நானல்லவா
கலக்கம் வேண்டாம் கவலை வேண்டாம்
காலம் முழுதும் உடனிருப்பேன்
ஆண்டவரின் ஆவி என் மேலே
ஏனெனில் என்னை அருள்பொழிவு செய்தார்
ஆண்டவர் வாழ்க (2) ஆண்டவரின் ஆவி என் மேலே

அழுகைக்குப் பதிலாய் அரவணைக்க
நலிவுற்ற நெஞ்சத்திற்கு உறுதியூட்ட (2)
மேடு பள்ளங்களைச் சமன் செய்ய - 2
ஏற்றத் தாழ்வுகளை வேரகற்ற
உன்னைத் தேர்ந்துள்ளேன்
அழிக்கவே ஆக்கவே - உன்னை
அனுப்புகிறேன் - ஆண்டவரின்...

இடிந்து கிடப்பதைச் சீர்படுத்த
அழிந்து போனதை உருவாக்க (2)
வாழ்வை இழந்தோர் வாழ்வு பெற - 2
சிறையில் வாடுவோர் விடுதலையாய்
உன்னைத் தேர்ந்துள்ளேன்
படைக்கவே வளர்க்கவே - உன்னை
அனுப்புகிறேன் - ஆண்டவரின்...




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்