Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

  தியானப் பாடல்கள்  424-நீ இறைவனைத்  

நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க - இறைவன்
உன்னைத் தேடுகிறான் - 2
நீ அவர் புகழ் பாடிக்கொண்டிருக்க
அவனோ உன் புகழ் பாடுகிறான் - 2

அழுகையில் அவனை அழைத்திடுங்கள்
அழுகுரல் கேட்டு அரவணைப்பான்
நீதியை நெஞ்சினில் இறைத்திடுங்கள்
நீதியின் தேவன் சிரித்திடுவான் - நீ

இரக்கம் கொண்ட நெஞ்சினிலே
இனிமை பொழிந்திட வந்திடுவான்
தூய்மையின் வழியில் நடந்திடுங்கள்
வாய்மையின் உருவில் வளர்ந்திடுவான் - நீ


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்