Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

  தியானப் பாடல்கள்  423-நீ இல்லாத உள்ளம்  
நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம்
எந்நாளும் உனக்காக ஏங்கும் மனம்
இறைவா இறைவா - 2

மழையாக வந்தும் மனம் மீது நின்றும்
நனையாத நிலமாகினேன்
ஒளியாக நிறைந்தும் வாழ்வோடு இணைந்தும்
விடிவில்லா இரவாகினேன்
உயிரூட்டும் அருள் மேகம் எனைச் சூளுமோ
வாழ்வேற்றும் ஒளிவெள்ளம் எனை ஆளுமோ
இறைவா இறைவா - 2

கண்ணீரில் மூழ்கி போராடும் நிலைபோல்
தவிக்கின்றேன் உனைத் தேடியே
போர் வந்த காலம் துடிக்கின்ற புவிபோல்
அழுகின்றேன் துணை நாடியே
எதனாலும் நிறையாத வெறுமை இது
உன் அருளின்றி துயிலாத இதயம் இது
இறைவா இறைவா 2




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்