Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

  தியானப் பாடல்கள்  422-நிலையில்லா உலகு  

நிலையில்லா உலகு நிஐமில்லா உறவு
நிலையானதொன்றுமிங்கில்லை
நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம்
நீ மட்டும் போதும் எப்போதும்
நீ மட்டும் போதும் (2) நீ மட்டும் போதும் எப்போதும்

ஆசையிலே பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து
ஆடியிங்கு அடங்குது வாழ்க்கை
வாழ்வு தரும் வார்த்தை வாழ்வுதனை வளர்த்தால்
வசந்தம் வந்து நம்மில் என்றும் தங்கும்
நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும் (2)
நீ மட்டும் போதும் எப்போதும்;

பொய்மையிலே விழுந்து போலியாக நடந்து
பொழுதிங்கு போகுது கழிந்து
உண்மைதனை உணர்ந்து உறுதியுடன் எழுந்தால்
ஊதியங்கள் தேவையில்லை நமக்கு
நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும் (2)
நீ மட்டும் போதும் எப்போதும்;



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்