தியானப் பாடல்கள் | 386-நிலையான சொந்தம் |
நிலையான சொந்தம் நீதானே என்றும் நீ போதும் என் இயேசுவே - 2 நிலையான சொந்தம் நீதானே என்றும் நீ போதும் என் இயேசுவே அயராது என்றும் அணைக்கின்ற செல்வம் நீ போதும் என் இயேசுவே கொடியாக நீயும் கிளையாக நானும் பிரியாத வரம் வேண்டுமே கடலாக நீயும் நதியான நானும் இணைசேர அருள் வேண்டுமே உனைக் காண என் விழிகள் ஒளி தேடுதே உனையன்றி என் வாழ்வு குமிழ் போன்றதே (2) உடையாத உறவாய் கலையாத கனவாய் நீ போதும் என் இயேசுவே மறையாத உன் அன்பு மடியாது எந்நாளும் நீ போதும் என் இயேசுவே சுமைகளால் நான் சோர்ந்திருந்தேன் சுகமாய் வந்து நீ சேர்ந்தாய் (2) என் வாழ்வில் நீ - என்றும் நிலையான சொந்தமே அணையாத அருளாய் அழியாத விருந்தாய் நீ போதும் என் இயேசுவே விலகாத உயிராய் நலம் சேர்க்கும் மருந்தாய் நீ போதும் என் இயேசுவே வறுமையால் நான் வாடி நின்றேன் வசந்தமாய் வந்து நீ சேர்ந்தாய் (2) என் வாழ்வில் நீ - என்றும் நிலையான சொந்தமே |