Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  420-நிம்மதியாய் வாழ்ந்திடவே  

நிம்மதியாய் வாழ்ந்திடவே நெஞ்சம் ஏங்குதே
அம்மையப்பன் திருப்பதமே தஞ்சமாகுதே
தடைகள் ஆயிரம் மடைகள் போடுதே
தாண்டி வருவதும் கடினமாகுதே
வல்லமை தாரும் நல்ல தேவனே
வல்ல செயல்களால் உலகை வெல்லவே
நீ மட்டுமே எனக்கு நிம்மதி (இறைவா) - 2
நிம்மதி - 3 இறைவா உந்தன் சன்னதியே நிம்மதி

ஆண்டவன் கட்டளைக்குப் பணிய மறுத்ததால்
ஆதாம் ஏவாளும் நிம்மதி இழந்தார்
ஆபேலின் காணிக்கையைக் கடவுள் ஏற்றதால்
சோதரன் காயினும் நிம்மதி இழந்தான்
சுயநலத்தில் வாழும் போது நிம்மதி பறக்கும்
பொது நலத்தில் வாழ்ந்து விட்டால் நிம்மதி பிறக்கும்
இறுதி வரை உறுதியாக பிறருக்காகத் தன்னைத் தந்த
நீ மட்டுமே எனக்கு நிம்மதி (இறைவா) - 2
நிம்மதி - 3 இறைவா உந்தன் சன்னதியே நிம்மதி

ஆடையின் விளிம்பு தொட்ட பாடுள்ள பெண்ணும்
உடனே குணம் பெற்று நிம்மதியடைந்தாள்
இருந்ததும் தந்துவிட்ட ஏழை விதவையும்
இறைவனை நம்பியதால் நிம்மதியடைந்தார்
நம்பிக்கையில் வாழ்ந்து விட்டால் நிம்மதி கிடைக்கும்
நம்பிக்கை தளர்ந்துவிட்டால் நிம்மதி பறக்கும்
இறுதி வரை உறுதியாகத் தந்தையையே நம்பி வாழ்ந்த
நீ மட்டுமே எனக்கு நிம்மதி (தலைவா) - 2
நிம்மதி - 3 தலைவா உந்தன் சன்னதியே நிம்மதி




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்