தியானப் பாடல்கள் | 418-நானே உன் அன்பு |
நானே உன் அன்பு தேவன் நானே - 2 கண்ணின் இமைபோல் உன்னைக் கொண்டேன் - 2 விலைமதிப்பில்லாதவன் நீயே - 2 நானே உன் அன்பு தேவன் நானே வாழ்வு தருபவன் நானே வழிநடத்துபவன் நானே - 2 கரம் விரித்து இமை திறந்து இதயத்தில் உன்னைத் தாங்கி நின்றேன் எனைப் பிரிந்து உன் நிலை மறந்து உயிரற்ற சருகாய் உழன்று நின்றாய் நீ மனம் திரும்ப ஏங்குகிறேன் ஏங்குகிறேன் பாவம் களைபவன் நானே உன் நம்பிக்கை நானே - 2 பழிக்கப்பட்டு நொறுக்கப்பட்டு மண்ணக வாழ்வினை தியாகம் செய்தேன் புதைக்கப்பட்டு உயிர்த்தெழுந்து - என் அளவில்லா அன்பினை உனக்களித்தேன் நீ ஒளியினில் வாழ்ந்திட ஏங்குகிறேன் ஏங்குகிறேன் |