தியானப் பாடல்கள் | 416-நான் செல்லும் |
நான் செல்லும் இடமெல்லாம் உன்னை நான் காண வேண்டும் இயேசுவே என்னைப் பார்க்கும் மனிதரெல்லாம் - உன்னை என்னில் பார்க்க வேண்டும் இயேசுவே குழந்தை உள்ளத் தூய்மை இருந்தால் எழிலாம் இறையின் உருவம் காண்பேன் குழந்தைபோல நானும் வாழ்ந்தால் வாழும் என்னில் உன்னைப் பார்ப்பார் துயரில் உம்மைத் துதிப்போர் வாழ்வில் சிலுவை சுமந்த சுதனைக் காண்பேன் சிலுவை வரினும் சிரித்து ஏற்றால் சுமக்கும் என்னில் உம்மைப் பார்ப்பார் எனக்கே செய்தீர் உணர்ந்தோர் வாழ்வில் உனக்கே வடிவம் கொடுக்கக் காண்பேன் எளியோர் பணியே இறைவன் பணியாய் வாழ்ந்தால் என்னில் உம்மைப் பார்ப்பார் |