தியானப் பாடல்கள் | 415-நான் உனக்காக மகன |
நான் உனக்காக மகனே நான் உனக்காக என்னை நம்பி வாழ்கிறாய் நான் உனக்காக நீ எனக்காக இறைவா நீ எனக்காக உன்னை நம்பி வாழ்கிறேன் நீ எனக்காக பொழியும் நல்ல வானம் தந்தேன் நான் உனக்காக விளையும் நல்ல பூமி தந்தேன் நான் உனக்காக இரவும் பகலும் பிரித்து வைத்தேன் நான் உனக்காக படைத்தவை அனைத்தும் நலமெனக் கண்டேன் நான் உனக்காக வானம்போல மனதைத்தருவேன் நான் உனக்காக பூமி போல பலனைத் தருவேன் நான் உனக்காக பகலைப்போல ஒளியைத் தருவேன் நான் உனக்காக இருளைப்போல பொறுமை கொள்வேன் நான் உனக்காக அன்பு செய்யும் அருளைத் தந்தேன் நான் உனக்காக மன்னிக்கின்ற இதயம் தந்தேன் நான் உனக்காக ஏற்றுக் கொள்ளும் மனதைத் தந்தேன் நான் உனக்காக மாற்றம் செய்யும் வலிமை தந்தேன் நான் உனக்காக |