Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  414-நான் உன்னை விட்டு  


நான் உன்னை விட்டு விலகுவதில்லை
என்றும் கைவிடுவதில்லை 2
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணி போல் உன்னைக் காப்பேன் - 2

பயப்படாதே நீ மனமே - நான்
காத்திடுவேன் உன்னை தினமே - 2
அற்புதங்கள் நான் செய்திடுவேன் - 2
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் - 2

திகையாதே கலங்காதே மனமே - நான்
உன்னிடம் இருக்க பயமேன் - 2
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் - 2
உன் கவலைகள் யாவும் போக்கிடுவேன் - 2

அனுதினம் என்னைத் தேடுவாய்  - நான்
அளித்திடும் பலனைப் பெற்றிடுவாய் - 2
அத்தி மரம்போல் செழித்திடுவாய் - 2  நான்
ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய் - 2



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்