Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  413-நான் உன்னைப்  



நான் உன்னைப் பாடவந்தேன்
அன்பனே நல் அன்பனே - என்
இனிய இயேசுவே எந்நாளுமே உன் இதயமே
எந்தன் இல்லமே எந்தன் இல்லமே (2)

அமுத மொழிகள் பேசும் - உந்தன்
வார்த்தை ஒன்று போதுமே (2)
அலையும் புயலும் தாக்கும் - எனது
மனதில் அமைதி தோணுமே
ஒரு வார்த்தை பேசுமே
என் வாழ்வு மாறுமே (2)

சேயை அணைக்கும் தாயைப் - போல
என்னை அணைக்க வேணுமே (2)
நோயும் பேயும் நீங்கி நானும் - நலமாய்
வாழ வேணுமே
உன் கரங்கள் போதுமே
நான் சுகமாய் வாழவே (2)



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்