தியானப் பாடல்கள் | 412-நான் உன்னைக் |
நான் உன்னைக் கேட்பதெல்லாம் இதுதான் இதுமட்டும் தான் உன்னை நான் அன்பு செய்தேன் என்பதை மறவாதே எந்நாளும் என் அன்பை மறவாதே உன்னை விட்டுப் பிரிந்தாலும் கண்ணை விட்டு மறைந்தாலும் உன்னை என் கண் எனவே எண்ணியதை மறவாதே துன்பங்கள் சேர்ந்தாலும் துவண்டு நீ சோர்ந்தாலும் என் அன்பு உனைத் தாங்கும் என் நினைவே உனைக் காக்கும் |