Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  407-தாயும் நீயே என்  



தாயும் நீயே என் தயவும் நீயே
நீயே ஆ.ஆ.ஆ.
நீயே நிநிச சசநி மமக ககநி கமகம கசாகநி
நீயே நிநிச நிநிசா சதகதம் சதகதம் தகதகதோம் தகதகதோம்

தாயும் நீயே என் தயவும் நீயே 2
தாயும் நீயே என் தயவும் நீயே
அருளும் வளமும் நிரம்பி வழியும்
நிறைவாழ்வைத் தந்த - என்; தெய்வமும் நீயே

சநிமா பபசகமசச(2) ஆ.
நான் செல்லும் இடமெல்லாம் நீ முன்னே செல்கின்றாய்
கால்கள் இடறாமல் கைகளில்; தாங்குகிறாய் - என்
துன்ப துயரினில் அருகில் நீ இருக்கின்றாய் (2)
உடல் உள்ள நோய் தீர்ந்து எந்நாளும் காத்து வரும்

என்செவி படைத்தவரே என் வேண்டல் மறுப்பாரோ
என் விழி திறந்தவரே எனைக் காண மறப்பாரோ
எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம் அறிபவரே (2)
உன் சித்தம் வாழ்க்கையில் இறையாசீர் பெருகுமே



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்