தியானப் பாடல்கள் | 405-தாய்க்கு அன்பு வற்றிப் |
தாய்க்கு அன்பு வற்றிப் போகுமோ தனது பிள்ளை அவள் மறப்பாளோ தாய் மறந்தாலும் நான் மறவேனே தயவுள்ள நம் கடவுள் தான் உரைத்தாரே குன்றுகூட அசைந்து போகலாம் குகைகள்கூட பெயர்ந்து போகலாம் அன்புகொண்ட என்தன் நெஞ்சமே அசைவதில்லை பெயர்வதில்லையே தீ நடுவே நீ நடந்தாலும் ஆழ் கடலைத் தான் கடந்தாலும் தீமை எதுவும் நிகழ்வதில்லையே தீதின்றியே காத்திடுவேன் நான் கழுகு சிறகில் குஞ்சை அமர்த்தியே கனிந்த அன்பில் சுமந்து செல்லுமே கழுகைப்போல தான் உனைத்தானே காலமெல்லாம் சுமந்து செல்வேனே உன்னை அன்று மீட்டதும் நாமே உரிய பெயரில் அழைத்ததும் நாமே என்னைக் கண்டு வந்ததனாலே என்றும் நீயே எனக்குச் சொந்தமே |