தியானப் பாடல்கள் | 404-தனியாக நின்றேன் |
தனியாக நின்றேன் துணையாக வந்தாய் என்னே உன் அன்பு ஐயா உள்ளம் எண்ணி உருகுதையா தாயின்றி சேய் இல்லையே - இனி நீ இன்றி நானில்லையே யேசுவே என் உயிரே பொருள் கோடி வந்தாலும் பொன் மாரி பொழிந்தாலும் யேசுவே என் கதியே அசை இன்றி இசை இல்லையே - உன் அருள் இன்றி நான் இல்லையே யேசுவே என் உயிரே துயரங்கள் வந்தாலும் துன்பங்கள் வந்தாலும் யேசுவே என் கதியே |