தியானப் பாடல்கள் | 402-சுமை சுமந்து சோர்த்திருப்போரே |
சுமை சுமந்து சோர்த்திருப்போரே வாருங்கள் - நம் ஆண்டவர் அழைக்கின்றார் இளைப்பாற்றி கொடுக்கின்றார் - ஆ இரு கரம் விரித்தவராய் இதயத்தைத் திறந்தவராய் இறைவன் இருக்கின்றார் இனியும் தாமதமேன்? பசியால் வாடுவோரே பரமனைத் தேடிடுவீர் மன்னா பொழிந்த அவர் நம்மை வாழ வைப்பார் அல்லல்படுவோரே ஆறுதல் வேண்டுமென்றால் ஆண்டவர் பாதம் தன்னில் அமர்ந்து அழுதிடுங்கள் வரும் வழி பார்த்தவராய் வரம் மழை பொழிந்தவராய் வந்தவர் இருக்கின்றார் விரைந்திட தாமதமேன் துயரினில் ஆறுதலாய் நோயினில் மருத்துவராய் அடிமையின் விடுதலையாய் ஆண்டவர் இருக்கின்றார் வறுமையின் விருந்தெனவே வெறுமையில் மகிழ்வெனவே வேந்தன் இருக்கின்றார் வந்திடத் தாமதமேன் |